இரண்டு நாளில் 2.4 கோடிகள் வசூலில் காக்கா முட்டை
வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் தவிர்த்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களை ஈர்க்காது, லாபம் ஈட்ட அந்தப் படங்களால் இயலாது என்ற கருத்தை காக்கா முட்டை உடைத்துள்ளது. சாதாரண பார்வையாளர்களால் காக்கா முட்டை திரையரங்குகள் நிரம்பியுள்ளன.
சின்ன பட்ஜெட்டில் இரண்டு சிறுவர்கள் பிரதான வேடத்தில் நடித்த காக்கா முட்டை எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு தினங்களில் இப்படம் இந்தியாவில் 2.4 கோடிகளை வசூலித்துள்ளது. எந்த முன்னணி நடிகரும் இல்லாத, முக்கியமாக கமர்ஷியல் அம்சங்கள் ஏதுமற்ற காக்கா முட்டை இவ்வளவு வசூலை பெற்றது அற்புதமான கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.



