எமிரேட்ஸ் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம் !
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து டுபாய் நோக்கி 510 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் வகை விமானமொன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகளை ஏனைய விமானங்களில் டுபாய்க்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.



