Breaking News

20ஐ நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றக் கலைப்பு ; அரசு

தனது அதிகாரங்களை இழந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஜனாதிபதியால், 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதென்பது மிகப்பெரிய காரியமல்ல என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.