காவல் நிலையம் வரை சென்ற இளம் தம்பதிகளின் இன்ப விளையாட்டு சத்தம்
இளம் தம்பதிகளின் இன்ப விளையாட்டுச் சத்தம் கொஞ்சம் ஒவராகி, காவல் நிலையம் வரை சென்ற சம்பவம், நம்ப ஊரில் அல்ல அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ரோஜர்வில்லே நகரை சேர்ந்தவர் மார்க் காலின். இவரது அருகில் உள்ள ஒரு வீட்டில் அடிதடி அளவுக்கு வெகுநேரம் சத்தம் கேட்டது.
இதனால், பயந்து போன காலின், அக்கம் பக்கத்து வீட்டில் பயங்கர அடிதடி நடப்பதாகக் கருதி, உடனே காவல் நிலையத்திற்குத் தனது செல் போன் மூலம் தகவல் கொடுத்தார்.
எல்லாம் முடிந்த பின்பு வரும், காவல்துறை போல வராமல், சில நிமிடத்தில், அந்த ஸ்பாட்டில் ஆஜரானது அமெரிக்கா காவல்துறை. மேலும். நித்தமும் சத்தம் வரும் அந்த வீட்டின் கதவை மெல்ல தட்டி, வீட்டில் இருந்தவர்களை வெளியே வர உத்தரவிட்டனர்.
அப்போது, உள்ளேயிருந்து ரிச்சர்ட் (33) என்பவரும், அவரது மனைவி எரின் லாசனும் (32) துணிகள் கலைந்த அரை நிர்வான கோலத்திலும், பாதிக் களைப்பில், மீதியை வெளியே சொல்லமுடியாமல் வெளியே வந்து, நாங்கள் வாய்ச்சண்டை எல்லாம் போடவில்லை, இரவுநேர இன்பச் சண்டை தான் போட்டோம், கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டோம், அதனால் தான் சத்தம் லைட்டா எகிறிவிட்டது, சாரி சார், இனி சத்தம் வராமல் சமாளித்துக் கொள்கிறோம் என டன் கணக்கில் வெட்கம் வெளிவர விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதைக் கேட்ட காவல்துறையினர் தலையில் அடித்துக் கொண்டு, சத்தம் இல்லாமல், மொத்தமாக என்ஜாய் பண்ணுங்கோ என அட்வைஸ் கூறிவிட்டு அந்த இடத்தைக் காலி செய்தனர்.
அவர்கள் காவல் நிலையத்தை அடையும் முன்பே மீண்டும் காலின் போன் செய்து, சார், அவர்கள் விளையாட்டைப் பாதியில் நான் கெடுத்துவிட்டதாகக் கூறி, எனது உடலில் ரத்தம் வர விளையாடிவிட்டனர் எனப் புகார் கூறியுள்ளார்.
மீண்டும் அங்கு வந்த காவல்துறையினர் காலினை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும், காலின் உடலில் காயம் ஏற்படுத்திய இந்தத் தம்பதிகள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மீண்டும் ஏதோ சத்தம் வருது போல, எல்லாம் மனப்பிரம்மை சார்.....அது சரி.



