றஊப் ஏ. மஜீட் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அதரவு
முன்னாள் நகர சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான றஊப் அப்துல் மஜீட் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் அக் கட்சியின் முதன்மை வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இன்று காலை (24) காத்தான்குடி கயா பேக்ஹவுஸில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே றஊப் அப்துல் மஜீட் தான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சலுகத்தின் நன்மைக்காக நான் மௌனமாக இருந்தேன் ஆனால் இந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நமது பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவளிக்கவுள்ளேன்.
எமது புதியதொன்றல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாகும். அந்தக் கட்சியில் போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவளிக்கவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்ததார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது அழைப்பை ஏற்று எமது வெற்றிக்காக உழைப்பதற்கு முன்வந்த றஊப் அப்துல் மஜீடுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்ததார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் றஊப் அப்துல் மஜீட் மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பெருமளவிலான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



