ஸ்பெயினில் எருது விரட்டும் நிகழ்ச்சிக்கு எதிராக அரைநிர்வாண போராட்டம்
ஸ்பெயின் நாட்டில் வருடந்தோறும் ஜூலை மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்று வரும் எருது விரட்டும் நிகழ்ச்சிக்கு எதிராக ஒரு அமைப்பினர் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.
இங்குள்ள பாம்ப்லோனா நகரில் பாரம்பரிய சான் பெர்மின் (San Fermin) திருவிழாவின் ஒரு பகுதியாக எருது விரட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஜூலை மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேவரை வரை நடைபெறும். தற்போது இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் முன்பகுதியாக போட்டி நடக்கும் வீதியில் இருந்து எருதுகளை போட்டி வளையத்திற்குள் விரட்டிக்கொண்டு வருவார்கள். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிற்கு முன்னேயும், பின்னேயும் வந்து அதை விரட்டுவார்கள். இதில் மாடுகள் பார்வையாளர்கள் மீது பாய்ந்து முட்டித்தள்ளும். இதில் நூற்றுக்காணக்கானோர் காயம் அடைவார்கள். இதன்பின் எருது போட்டி வளையத்திற்குள் செல்லும்.
இந்த நிகழ்ச்சியில் எருதுகளை துன்புறுத்துவதாக கூறி ‘பீடா’ என்று அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். மேலும், எருதுகளை அழைத்து வரும் வீதியில் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தினர். அப்போது சிவப்பு சாயத்தை தங்களது உடல் முழுவதும் பூசிக்கொண்டும், மாட்டுக்கொம்பை போல் தங்களது தலையில் கொம்பை வைத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 300 பேர் வரை இந்த எருது விரட்டும் நகிழ்ச்சியில் காயம் அடைவார்கள். சில சமயம் உயிரிழப்பும் ஏற்படும். இந்த நிகழ்ச்சியை ஸ்பெயின் தேசிய தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்புவது குறிப்பிடத்தக்கது.



