Breaking News

இந்திய மினவர்கள் மீது தாக்குதல்

தென் தமிழ்நாட்டின் கொடியாக்கரையில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக இந்தியாவின் பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 

30, 40 பேர் கொண்ட இந்திய மீனவர்கள் குழு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்களிடமிருந்த 60 மில்லியன் இந்திய ரூபாய் (12.66 கோடி இலங்கை ரூபாய்) மதிப்புள்ள 15 தொன் மீன் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் பலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து படகுகளில் வந்த சுமார் 15 பேர் கொண்ட இலங்கை மீனவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 
நமது நிருபர்