Breaking News

நேபாளத்தில் மீண்டும் பூகம்பம் !!!

இரண்டு சிறிய அளவிலான பூமி அதிர்வுகள் ஏற்பட்டதன் காரணமாக தமது வீடுகளில் இருந்து வெளியேறி திறந்த வெளிகளில் குழுமியுள்ளனர். 

4.6 மெக்னிடியுட் அளவான முதலாவது அதிர்வு அதிகாலை 1.27இற்கு கத்மண்டுவுக்கு கிழக்கே 75 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிந்துபிளச்சவ்க மகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய பூமியதிர்ச்சியியல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

4.2 மெக்னிடியுட் அளவான மற்றுமொரு நில அதிர்வு கத்மண்டுவுக்கு மேற்கே 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள டாடிங் மகாணத்தில் காலை 10.07 இற்கு பதிவாகியுள்ளது.

9,000 உயிர்களையும் பரவலான அனர்த்தததையும் ஏற்படுத்திய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்பட்ட பாரிய பூகம்பங்களின் பின்னர் மொத்தமாக 4 மற்றும் அதைவிக் கூடிய மெக்னிடியுட் அளவுள்ள 342 நில அதிர்வுகள் இதுவரை பதிவாகியுள்ளன. 

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருநாட்கள் தெடர்ச்சியாக நில அதிர்வுகள் உணரப்பட்டன.  
நமது நிருபர்