Breaking News

என்ன த்ரிஷா ஒரு குழந்தைக்கு அம்மாவா? !!!

த்ரிஷா ஒரு குழந்தைக்கு அம்மாவாக சதுரங்க வேட்டை 2 ல் நடிக்கிறாராம். அப்போ, அர்விந்த் சாமிக்கு ஜோடி? பூர்ணா தான். அரவிந்த்சாமியின் மனைவியாகி பூர்ணா நடிக்க, த்ரிஷா அரவிந்தசாமியின் வில்லி போல நடிக்கிறாராம்.

மலேசியாவில் ஷூட்டிங் நடந்துகொண்டு வந்தது. சனிக்கிழமையுடன் அரவிந்த் சாமியின் ஷூட் செட்யூல் ஓவராம்.

சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இப்படத்தை இயக்க; கதை, திரைக்கதை மற்றும் வசனம் எல்லாவற்றையும் முடித்து ‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத்.

நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, ஹைடெக்காக எப்படி மக்களை ஏமாற்றுவது பத்திதான் கதை.

இதில் மனோபாலா, கோவை சரளா நடிக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ஸ்டில்லை பதிவு செய்துள்ளார். எந்த படம் என்று குறிப்பிடவில்லை.