Breaking News

காலையில் பல் துலக்குவதால் பயனிலையாம் .!

தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் அன்றாடம் பல் துலக்குவது வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படி பல்துலக்குவது எந்த பலனும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம், இரவு நேரங்களில்தான் நம் பற்களில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்குமாம்.

இரவில் சாப்பிடும் உணவுப்பொருட்களில் பற்களில் ஒட்டக்கூடிய, பிஸ்கெட், ஐஸ்கிரிம், மற்றும் மாவு பொருட்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் சந்துகளில் ஒட்டிக்கொள்ளும்போது இரவு நேரங்களில் வாயில் பாக்டீரியாக்கள் லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன.

இந்த வகையான அமிலம் நம்முடைய பற்களை எளிதில் சிதைத்து விடுகின்றது. இதன் காரணமாகவே பற்களில் சொத்தை ஏற்படுகின்றது.

மேலும், இந்த வகையான பாக்டீரியாக்கள் ஈறுகளில் வலியை ஏற்படுத்துகின்றது. எனவே பற்களில் பிரச்சனை வராமல் தடுப்பதற்கு காலையில் பல் துலக்காமலே இருந்தால் போதும்.

காலை முதல் இரவு வரைக்கும் பல்வேறு வகையான உணவினை சாப்பிடுகிறோம். அவ்வாறு சாப்பிடும் உணவுகள் பற்களில் சந்துகளில் ஒட்டிக்கொள்ளும்.

நாம்தூங்கிய அரை மணி நேரத்தில் கிருமிகள் நமது பற்களை சொத்தையாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன.

அப்படி இருக்கும்போது காலையில் தூங்கி எழுந்தவுடன் பற்களை துலக்குவது வேஸ்ட், இதனை தடுப்பதற்கு தூங்குவதற்கு முன்பாக பற்களை துலக்குவது சிறந்தது. காலை நேரங்களில் சுடு தண்ணீர் அல்லது கொஞ்சம் உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்தாலே போதும், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.