இலங்கையில் அஜித், விஜய், ரஜினியின் ரேட் என்ன...?
இலங்கையில் தமிழ்ப் படங்கள் முழு அளவில் வெளியாகி வருகின்றன.
வேதாளம் படம் அங்கு 42 திரையரங்குகளில் வெளியானது. படத்தை 1.05 கோடிகளுக்கு கொள்வனவு செய்து முதல் மூன்று தினங்கள் இடைவெளியேயில்லாமல் படத்தை ஓட்டியிருக்கிறார்கள், செம லாபம்.
அடுத்து தெறி படம் 48 திரையரங்குகளில் வெளியானது. 1.30 கோடிகளுக்கு கொள்வனவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். வேதாளத்தைவிட 25 லட்சங்கள் அதிகம். வேதாளம் போலவே தெறியும் அங்கு ஹிட்.
கபாலி படம் மொத்தம் 60 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே அதிக திரையரங்குகளில் வெளியான தமிழ்ப் படம். இந்தப் படத்துக்கு 2 கோடிகள் தந்திருக்கிறார்கள். வசூல் பிச்சு உதறுகிறது என்கிறார் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்.



