Breaking News

ஆக்ஷன் குயினாக மாறும் நயன்தாரா

பில்லா படத்திலேயே நயன்தாரா ஆக்ஷன் காட்ட ஆரம்பித்தார். இந்நிலையில் இரு முகனில் அவரது சண்டைக் காட்சிகள் மிகவும் சிரத்தையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. கவர்ச்சி இமேஜிலிருந்து கரையேற துடிக்கும் நயன்தாராவும் மிகுந்த ஈடுபாட்டோடு இரு முகன் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம் என்கின்றன தகவல்கள்.

இரு முகனில் விக்ரம் 'ரா' உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இன்னொரு வேடம் திருநங்கை என்கிறார்கள். ஆகஸ்டில் பாடல்களை வெளியிட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.