பின்கதவால் வரப்போவதில்லை – ஜோசப் மைக்கல்
பின்கதவால் வரப்போவதில்லை – ஜோசப் மைக்கல்
முக்கியத்துவம் மிக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் ஜக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக வெளியான அறிக்கை பொய்யானதாகும் என அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
வழமைபோன்று தான் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா 1976ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்துள்ளதோடு தேசியப் பட்டியலில் ஒரேயொரு தடவை மாத்திரமே அவர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அது 2010 ஆண்டிலேயே இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நிருபர்