ஹம்மாந்தோட்டையில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு !
கடந்த 12 மணித்தியாலங்களில் ஹம்மாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் தேர்தலுக்காக கட்டப்படடிருந்த தோரணங்கள் மற்றும் கட்அவுட்கள் சேதப்படுத்தப்பட்ட 06 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களின் வீடுகள் பலவற்றிற்குள் பட்டாசுகளை கொழுத்தி வீசிய சம்பவங்கள் மேலும் அது போன்ற சம்பவங்களோடு கட்டப்படடிருந்த தோரணங்கள் மற்றும் கட்அவுடகள் சேதப்படுத்தல் தொடர்பான சம்பவங்கள் எல்லகல,லுணுகம்வெஹர, தங்கல்ல போன்ற பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அனுமதிப்பதென்ற தீர்மானம் வெளியானதோடு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாவதாக கெபே அமைப்பு தெரிவிக்கிறது.
தேர்தல் ஆணையாளரிடம் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்து, தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கெபே அமைப்பு தேர்தல் ஆணையாளரைக் கோரியுள்ளது.
நமது நிருபர்