Breaking News

திறமைக்கு இயலாமை தடைக்கல் அல்ல: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் அசாத்திய திறமை

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஹாரிபார்ட்டரின் உருவத்தை தனது வாயால் சித்திரமாக வரைந்து அசத்தியுள்ளார். 

இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்போர்டுஷைர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹென்றி பிரஸ்னர். 17 வயதில் ஏற்பட்ட விபத்தினால் இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. கழுத்திற்கு கீழே எந்த உடல் உறுப்பும் இயங்காத நிலையில் முற்றிலுமாக முடக்கப்பட்டார் ஹென்றி. 

திறமைக்கு இயலாமை தடைக்கல் அல்ல என்பதை தனது சித்திர திறமையால் உலகிற்கு ஹென்றி பிரஸ்னர் வெளிப்படுத்தியுள்ளார். ஹாரிபார்ட்டர் திரைப்படத்தின் கதாநாயகனை வெறும் 5 மணி நேரங்களில் தனது வாயால் வரைந்து அனைவரையும் பரவசப்படுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், "கைகால்கள் செயலிழந்த நிலையால் வாயால் சித்திரம் வரைவதை விரும்புகிறேன்" என்றார்.