Breaking News

சீ.பி.ரத்நாயக்கவின் மகன் ஹட்டன் பொலிஸாரால் கைது!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் மகனை ஹட்டன் பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர். வேட்பாளரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தை செலுத்தி சென்ற குற்றச்சாட்டில், இவர், ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வாகனத்தில் வேட்பாளர் இல்லாமல் இருந்ததாலேயே இவரை கைதுசெய்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.