Breaking News

தேவாலயத்தில் கன்னி மேரியின் உதடுகள் அசையும் வீடியோ!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ளது செயின்ட் செர்பல் தேவாலயம். இந்த தேவாலயத்தில் கன்னி மேரியின் பெயிண்டிங்  படம் பிரேம் செய்து மாட்டப்பட்டு இருந்தது. கடந்த சில  நாட்களுக்கு முன் இந்த புகைபடத்தின் உதடுகள் அசைவதாக கூறப்பட்டது.

இந்த காட்சி வீடியோவாகவும் பதிவு செய்யபட்டு உள்ளது.நீங்கள் கன்னி மேரி ஓவியம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் நெருக்கமாக பார்க்கும் போது அது பிரார்த்தனை செய்வது போல் உதடுகள் அசைவதை காட்டுகிறது.தேவாலயத்திற்கு வரும்  கத்தோலிக்கர்கள்  உண்மையில் இது இரு அதிசயம் என  வியக்கின்றனர்.எனினும் இது லைட்டிங் விளைவால் ஏற்படுத்தபட்டது என்றும் உண்மையில் உதடுள் அசையவில்லை எனவும் ஒருசாரர் தெரிவித்தனர். இருந்தும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தவறாமல் பிரார்த்தனைக்கு வந்து செல்லும்  ஜார்ஜ் ஆக்ராய் கூறும் போது நான் பலமுறை உதடுகள் அசைவதை பார்ர்த்தேன் எனகூறி உள்ளார்.அவர் தான் காண்பது இது  முதல் முறை அல்ல என்றும் இதுபோல் பல முறை கண்டு உள்ளதாகவும் கூறினார்.  இந்த முறை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இதை படம் பிடித்ததாக கூறி  உள்ளார்.இந்த வீடியோ கடந்த் 19-ந்தேதி படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அவர் கூறும் போது பார்வையாளர்களே இதை தெளிவுபடுத்த வேண்டும் .நான் ஓவ்வொரு பிரார்த்தனையின் போதும் பார்க்கிறேன். பிரார்த்தனை இறுதியில் ஜெபமாலை ஜெபிக்கிறேன்.இதை உறுதி படுத்தவே நான் இந்த வீடியோவை எடுத்து உள்ளேன்.நான் பல்வேறு ஒளி வடிவங்களில் பார்த்துள்ளேன் உதடுகள் அசைகின்றன எந்த மாறுதலும் இல்லை என கூறி உள்ளார். https://youtu.be/Qgwm6cUQ4qg