Breaking News

பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காத காதலனை அடித்து நொறுக்கிய காதலி.!

தனது காதலன் பாலியல் உற­வுக்கு சம்­ம­திக்­கா­ததால் அவரை கடு­மை­யாக தாக்­கிய குற்­றச்­சாட்டில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்டுள்ளார். ஜோர்­ஜியா மாநி­லத்தைச் சேர்ந்த 35 வய­தான டபேதா லீ குரூம்ஸ் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவராவார். அகஸ்ட்டா நகரில் தனது காத­ல­ரான கார்லோஸ் ரொட்­ரெகஸ் கிறேஸ் என்­ப­வ­ருடன் டபேதா லீ வசித்து வரு­கிறார். ஒருநாள் வெளியில் சென்று விட்டு, இரவு 11.30 மணி­ய­ளவில் மது­போ­தை­யுடன் டபேதா லீ வீடு திரும்­பி­ய­தா­கவும் அதன்பின் பாலியல் உற­வுக்கு மறுத்த காதலர் கார்லோஸ் கிறேஸை தாக்­கி­ய­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இதனால் கார்­லோஸின் முகம், தலை, கழுத்து உட்­பட பல பகு­தி­களில் காயங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வன்­மு­றை­யின்­போது தனது 66 வய­தான தாயா­ரையும் டபேதா தாக்­கி­யுள்ளார். டபே­தாவின் காதலர் கார்லோஸ், முகத்தில் இரத்தம் வழிந்த நிலையில், குளி­ய­ல­றைக்குள் ஓடிச்­சென்று, அவ­சர சேவைப் பிரி­வுக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிஸ் அவ்­வீட்­டுக்கு வந்­த­போது இச்­சண்டை குறித்த பொலி­ஸாரின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு டபேதா குரூம்ஸ் மறுத்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பொலிஸ் அதி­கா­ரி­க­ளு­டனும் அவர், மோதல் போக்­குடன் நடந்­து­ கொண்டார் எனவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். கைது செய்யப்பட்ட டபேதா லீ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.