Breaking News

பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!!!

நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஐஸ் கிரீமை சாப்பிடும் போதும் அல்லது சூடான காபி போன்றவற்றை சாப்பிடும் போதும் ஒவ்வொருமுறையும் வலியால் அலறுவீர்களா? ஆம், என்றால் நீங்கள் பல் கூச்சத்தால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள். இந்த கூர்மையான மற்றும் கடுமையான உணர்ச்சியை அனுபவித்தவர்களைப் பொறுத்தவரை 'பல் கூச்சம்' என்பது பாதிப்பு இல்லாத வார்த்தையாக தோன்றினாலும், இதனை சாதாரணமாக விளக்க முடியாது. பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!! பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும். தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!! பல் கூச்சத்திற்கான முக்கிய காரணம், பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும். இந்த கூழ், பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு, புளிப்பு போன்ற உணர்ச்சிகள் பல மடங்காக பெருகுவதே மக்கள் திடீரென வலியை வெளிப்படுத்துவதற்கான காரணம்
தீவிரமான முறையற்ற மற்றும் ஆர்வமாக பல் துலக்குதல் அல்லது வயது மேம்பாடு மூலம் ஏற்படலாம். ஈறுகள் குறையும் போது இனிப்பு, புளிப்பு, சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், பல்லின் வேர் சேதமடையும்.