எந்த தவறும் செய்யவில்லை: சூதாட்ட புகாருக்கு ரெய்னா மறுப்பு
புதுடில்லி: ‘‘லலித் மோடி கூறியது போல எவ்வித தவறான செயலிலும் ஈடுபடவில்லை. இவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்,’’ என, ரெய்னா தெரிவித்தார். இந்தியன் பிரிமியர் தொடரின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேடு தொடர்பாக 2010ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இவர், தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். இவர், பிரிமியர் தொடர் சூதாட்டம் குறித்து 2013ல் ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தி வெளியானது.



