Breaking News

ஆற்றங்கரை பிரதேசத்தில் குப்பைகளை போட வேண்டாம் - காத்தான்குடி பொலீஸார் கோரிக்கை

ஆற்றங்கரை பிரதேசத்தில் குப்பைகளை போட வேண்டாம் என காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.பி.வெதகெதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தனது வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளதாவது, காத்தான்குடியின் ஆற்றங்கரைப் பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு சுகாதராப் பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும், தற்போது யாரோ குப்பைகளுக்கு நெருப்பு வைத்துள்ளதால் அந்தப் பிரதேசம் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பொலீஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறையிட்டுள்ளனர்.

இது பண்டிகைக் காலம் என்பதால் இந்த மக்கள் தமது பண்டிகைக்கான ஆயத்தங்களை செய்வதற்கு முடியாத நிலையில் சிரப்படுகின்றனர். 

எனவே, நகர சபை வாகனங்கள் குப்பை சேகரிப்புக்கு வரும் வரை தமது குப்பைகளை வைத்திருந்து குறித்த வாகனங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

தற்போது நெருப்பு மூட்டப்பட்ட பிரதேசத்திற்கு இரண்டு தண்ணீர் பவுசர்களை அனுப்பி நெருப்பினை அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் குப்பை சேகரிப்புக்கு உடனடியாக வாகனங்களை அனுப்புமாறும் காத்தான்குடி நகரசபைச் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதகவும் வெதகெதர சுட்டிக்காட்டினார்.

பெருநாள் காலத்தில் வழமையை விடவும் வீடுகளிலும், உணவகங்களிலும் அதிக குப்பைகள் சேர்வது குறிப்பிடத்தக்கது

நமது நிருபர்