Breaking News

18ஆந் திகதி நோன்புப் பெருநாள் - கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக புனித ரமழான் மாதத்தை 29ஆகப் பூர்த்தி செய்து நாளை 18ஆந் திகதி நோன்புப் பெருநாளை கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவித்துள்ளது. 

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழுவின் விNஷட மாநாட்டிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் கொழும்பை அண்டியுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள், பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள், தேசிய சூறா சபைப் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கப் பிரதிநிதிகள், மேமன் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் இவ் விNஷட மாநாட்டில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
நமது நிருபர்