Breaking News

சமமாகவும் மரியாதையாகவும் நடத்தினால் தான் பேச்சு: ஒபாமாவுக்கு புதின் நிபந்தனை

"சமமாகவும் மரியாதையாகவும் நடத்தினால் தான் பேச்சுவார்த்தைக்கு முன் வருவேன்'' என அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை விதித்துள்ளார்.

அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒபாமாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார் புதின். அதில் அவர் கூறியுள்ளதாவது:உலகில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டுமானால் அமெரிக்க - ரஷ்ய உறவு நன்றாக இருக்க வேண்டும். உக்ரைன் விஷயத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன.என்ன தான் கருத்து வேறுபாடு இருந்தாலும், இரு நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது உலகிற்கு அவசியமாகிறது.சமமாகவும் மரியாதையாகவும் எங்களை நடத்தினால் தான் எந்த பிரச்னை பற்றியும் பேச முடியும். உலகை எதிர்நோக்கி உள்ள அச்சுறுத்தல்கள், சவால்கள், சிக்கலான பிரச்னைகளை நாம் தான் தீர்க்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்