நிச்சயம் 'மம்மி' ஆவேன், ஆனால் தற்போதைக்கு இல்லை: நடிகை கரீனா கபூர்
இத்தனை நாட்களாக குழந்தையே வேண்டாம் என்று இருந்த பாலிவுட் நடிகை கரீனா கபூர் தற்போது தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள கரீனா கபூர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார். காரணம் அவர் சல்மான் கான் ஜோடியாக நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் ஹிட்டாகியுள்ளது தான். கரீனா நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு கரீனாவின் கர்ப செய்தியை பலரும் எதிர்பார்த்தனர். திருமணம் செய்து கொண்டால் குழந்தை பெற்றுத் தான் ஆக வேண்டுமா. எனகக்கு குழந்தை எல்லாம் வேண்டாம் என்று கரீனா முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.



