இந்திய வீரர்கள் எனது சகோதரர்கள்
நமது இந்திய வீரர்கள் என் உடன் பிறந்த சகோதரர்கள் போன்றவர்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சொதப்பியதால், ரவி சாஸ்திரி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. எனினும் மூத்த வீரர்களின் ஆதரவால் மீண்டும் ரவி சாஸ்திரியே இயக்குனராக நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் இந்திய வீரர்கள் எனது சகோதரர்கள் என கருத்து தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி. இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், இந்திய வீரர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கருதினேன். மேலும் இந்திய வீரர்கள் என்னிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.



