உலகிலேயே அதிக வயதுடையவர் என்று கருதப்பட்ட ஜப்பான் தாத்தா மரணம்
உலகிலேயே மிக அதிக வயதில் வாழ்ந்து வருபவர் என்று சாதனைப் படைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த சகாரி மொமோய் (வயது 112). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். இவர் கடந்த ஆண்டு தனது 111-வது வயதில் அதிக வயதுடையோர் என்ற சிறப்பை பெற்றார்.
இவர் டோக்கியோவில் உள்ள ஒரு காப்பகத்தில் வாழ்ந்து வந்தார். சமீபகாலமாக சிறுநீரக கோளாறால் அவர் பாதிக்கப்பட்டு வந்தார். பின்னர் ஞாயிற்று கிழமை மரணம் அடைந்துள்ளார்.
புகுஷிமாவில் உள்ள மினாமிசோமாவில் 1903-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி பிறந்தார். உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு அதிக வயதில் வாழ்பவர் என்று கின்னஸ் ரெக்கார்டு சான்றிதழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நான் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வேன் என்று கம்பீரமாக கூறியிருந்தார்.