அப்பாவாகிறார் மைக்கேல் கிளார்க்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் நடப்பு உலகக் கோப்பை மகுடத்தை தன் நாட்டிற்காக வென்று அசத்தியுள்ளார். இப்படி பல அறிய சாதனைகளுக்கு சொந்தகாரராக இருக்கும் கிளார்க்குக்கு விரைவில் குழந்தை பிறக்க போகிறது.
ஆம் கிளார்க்கும், கைலியும் கடந்த 2012 ஆம் ஆண்டு இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது இத்தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் கிளார்க் பகிர்ந்துள்ளனர். இத்தகவலை கேப்டன் கிளார்க் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



