லிங்குசாமியை டீலில்விட்டு முத்தையாவுக்கு கால்ஷீட் தந்த விஷால்
விஷாலை வைத்து சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை இயக்குவதாக லிங்குசாமி கூறி வருகிறார். ஆனால், படம் எப்போது தொடங்கும் என்பது மர்மமாகவே உள்ளது. சுசீந்திரனின் பாயும் புலி படத்தில் நடித்த விஷால் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதையடுத்து அவர் லிங்குசாமிக்கு கால்ஷீட் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொம்பன் முத்தையா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் செப்டம்பரில் தொடங்குகிறது. மதுரை அன்பு கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முதலில் சுசீந்திரன் அடுத்து பாண்டிராஜ் அதையடுத்து முத்தையா. இந்த பட்டியலில் லிங்குசாமி இணைவது எப்போது?



