என் படத்தில் லட்சுமி மேனன் பேயாட்டம் போடவில்லை
என் படத்தில் லட்சுமி மேனன் பேயாக நடிக்கவில்லை என்று இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார். கோலிவுட் ரசிகர்களுக்கு அண்மை காலமாக பேய் படங்கள் தான் பிடித்துள்ளது. அதனால் இயக்குனர்களும் தங்கள் சக்திக்கு ஏற்ப பல வகையான பேய் படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். ரசிகர்களும் எத்தனை பேய் படம் வந்தாலும் நாங்கள் எல்லாம் அசரமாட்டோம்ல என்று தியேட்டர்களில் படத்தை பார்த்து ஹிட்டாக்கி வருகிறார்கள். பேய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து நடிகர், நடிகைகள் பேயாட்டம் போட ஆசைப்படுகிறார்கள்.




