Breaking News

த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜுன் மகன்

ராம் சரண் தேஜா, அல்லு அர்ஜுன் எல்லாம் ஆக்ஷனில் பின்னி பெடலெடுக்கும் போது, பெடலை பின்னிக் கொண்டிருக்கிறார் நாக சைதன்யா. அவரது அமுல்பேபி முகத்துக்கு ஆக்ஷன் செட்டாகவில்லை. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? கௌதம் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார். அதையடுத்து அவர் நடிக்கப் போவது, த்ரிவிக்ரம் இயக்கத்தில். இந்த தகவல் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. த்ரிவிக்ரமும் ஸ்கிரிப்டை தயார் செய்துவிட்டார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஹீரோயின் உள்பட பிற நட்சத்திரங்கள், கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.