ஒருமுறை முடிவெட்ட ரூ. 80,000.00 ஆயிரம் செலவு செய்த ஹிலாரி!
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தனது முடியை வெட்டி அலங்கரித்துக் கொள்வதற்காக ரூ. 38 ஆயிரம் செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார் ஹிலாரி கிளிண்டன். இவர் தனது முடியை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் இவர் பிரபல முடி அலங்கார கடைக்குச் சென்று அதிகமான செலவு செய்து தனது முடியை வெட்டி அலங்காரம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த முடி அலங்கார கடையின் தனி வாசல் வழியாக அவர் ரகசியமாக வந்து சென்றதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கடைக்கு அடிக்கடி வந்து அவர் தனது முடியை அலங்காரம் செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடையில் ஒருமுறை அவர் தனது முடியை வெட்டிக் கொள்ள 600 அமெரிக்க டாலர்கள் செலவாவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 80,000 ஆயிரம் ஆகும்.



