Breaking News

மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல இந்தி நடிகர் கைது !

மனநலம் பாதித்த சிறுமியை தனது நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் வசித்து நிலேஷ் நிர்பாவனே என்ற இந்தி நடிகர், தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தது தெரியவந்தது. அந்த சிறுமியை பொது கழிப்பிடங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று இவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட ஆசிரியை விசாரித்ததில் தன்னை 3 பேர் ஏதோ செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரை அடுத்து நிலேஷை பொலிசார் விசாரித்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.