Breaking News

கவர்ச்சி நடிகையை தெய்வமாக வணங்கும் கிராம மக்கள்!

1985ஆம் ஆண்டில் வெளியான ‘உதயகீதம்’ படத்தில் அறிமுகமானவர் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் பல படங்களில் நடித்தவர்.  பின்னர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்தார். அதன்பின்னர் இவர் சினிமாவில் தொடரவில்லை. பிரபுதேவா இயக்கிய ‘ராம்போ ராஜ்குமார்’ படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீஹரி மாரடைப்பில் மரணம் அடைந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரின் மறைவால் பொதுவாழ்வில் ஒதுங்கி இருந்த டிஸ்கோ சாந்தி தற்போது கணவர் விட்டு சென்ற சமூக சேவையை தொடர்ந்து வருகிறார். இவரது கணவர் ஸ்ரீஹரி ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். மேலும் தன்னுடைய நிலத்தில் விளைந்த நெல்களை உணவின்றி வாடும் ஏழைகளுக்கு கொடுத்து வந்தார். இந்நிலையில் இப்பணியை தற்போது டிஸ்கோ சாந்தி தொடர்ந்து வருகிறார். ஒரு முன்னாள் கவர்ச்சி நடிகையை இன்று அந்த கிராமத்து மக்கள் தங்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.