எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நடுநிலை வகிக்கத் தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆகஸ்ட் 17ஆந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அனுமதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தீர்மானம் அவரது 'வானவில்'; கூட்டணியில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் எதிலும் பங்கேற்பதில்லை என்ற ஜனாதிபதியின் தீர்மானம் பதட்டத்தை அதிகரித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை பெயரிடுமாறு கோரி வருகின்றனர் எனினும் இது வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வருகையை விரும்பாத அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் போட்டியிட வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 'நாங்கள் கலவரமடையவில்லை நாம் நம்பிக்கையுடன் மக்கள் முன் செல்வோம் ' என ஆங்கில தனியார் ஞாயிறு பத்திரிகையொன்றிற்கு அவர் தெரிவித்துள்ளார்இ விக்ரமசிங்க சிரிசேனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தவர் மாத்திரமல்லாது சிரிசேன ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கணிசமான வாக்குகளே காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
முன்னணியில் இருந்த மற்றுமொருவரான யாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தற்போதுள்ள சூழ்நிலை 'மூன்றாவது அணி' ஒன்றிற்கான அவசியத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 'நல்லாட்சிக்கான கொள்கையினை முதன்மைப்படுத்தி எமது ஜனவரி 8 வெற்றியை நாம் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை' என ஆங்கில தனியார் ஞாயிறு பத்திரிகையொன்றிற்கு அவர் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ மற்றும் விகரமசிங்க ஆகியோரின் அரசாங்கங்களை விமர்சிக்கும் யாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தற்போதுள்ள காபந்து அரசாங்கத்தின் அமைச்சராவார்.
நாம் எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றோம். ராஜபக்ஷ அரசியல் கும்பலுக்கு ஆதரவளிப்பதற்கோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இரகசிய வேலைத் திட்டங்களுக்கோ எமது நாட்டை அச்சுறுத்தும் அவரது கூட்டாளிகளுக்கோ அதரவளிப்பதற்கோ அவர்கள் விரும்பவில்லை என ரணவக்க தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையன்று சுசில் பிரேமஜயந்தஇ அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிரிபால டி சில்வா ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையே மூடிய கதவுக்குப் பின்னால் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ராஜபக்ஷவை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகாரமளித்தார். கம்பஹாஇ இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களுள் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவதனெ அவரே தெரிவு செய்ய வேண்டும். ஒழுங்கீனம் அல்லது நிழல் நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை வேட்புமனுவில் இணைத்துக்கொள்வதில்லை என்பதிலும் இணக்கம் காணப்பட்டது.
பிரதான போட்டிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிட அனுமதிக்கும் ஜனாதிபதி சிரிசேனவின் தீர்மானத்திற்கு எதிரான முதலாவது எதிர்ப்பு நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கிளம்பியிருக்கிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை - ஹம்மாந்தோட்டை பிரிவின் நிர்மாண வேலைகளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வுக்கு அவர் சென்றிருந்தார். பெருந்தெருக்கள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாஷிமும் அவருடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்