Breaking News

2016ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்றங்கள்

கல்வி அமைச்சு 2016ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்றங்களுக்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. 

அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுக்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களும் அதிபர்களுக்கான அறிவுறுத்தல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர், ஆசிரியர் இடமாற்றப் பிரிவு, இசுருபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு செப்டம்பர் மாதம் 11ஆந் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். 

இடமாற்ற சபையின் கூட்டத்தின் பின்னர் இவ்வருடம் டிசம்பர் மாதமளவில் இடாற்றம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலதிக விபரங்களை 0112784434 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  
நமது நிருபர்