Breaking News

வீட்டில் பிரமாண்ட டைனோசர் வைத்திருக்கும் முதியவர்

பிரித்தானியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டு வாசலில் பிரமாண்ட டைனோசர் சிலையை வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் வசிப்பவர் ஜேக் (72) சரித்திர புகழ்பெற்ற பொருட்களை சேகரிக்கும் ஆர்வமுள்ள இவர், தனது வீட்டில் பல்வேறு சரித்திர கலைப்பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது மனைவியும் கலைப்பொருட்கள் மீது ஆர்வமுள்ளவர். இந்நிலையில் ஜேக் 600 யூரோக்கள் கொடுத்து டைனோசர் சிலை ஒன்றை ஏலத்தில் வாங்கினார். பின்னர் அந்த டைனோசரை தனது வீட்டு வாசலில் வைத்துள்ளார். இந்நிலையில் ஏராளமான சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகின்றனர். மேலும் இந்த புதிய டைனோசரின் வரவால் அப்பகுதியில் பார்வையாளர்கள் குவிய தொடங்கியுள்ளனர்