Breaking News

வேற்று கிரகத்தினர் ஏதாவது செய்ய போகிறார்கள்? அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் அதிகரிப்பு!

பறக்கும் தட்டு வேற்று கிரக வாகனங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றி திரியும் வினோத பொருட்கள் குறித்து UFO (அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்) அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகின்றது.  இந்த அமைப்புகளில் முபான் (mufon) என்ற அமைப்பு மிகப்பெரிய மற்றும் பிரபலமான அமைப்பாகும்.  இந்த அமைப்பு கடந்த மாதம் எப்போதையும் விட 2 மடங்கு அடையாளம் தெரியாத பொருட்கள் பறந்ததாக கூறி உள்ளது.

முபான் அமைப்பு கூறியதாவது:-

கடந்த மாதம் மாதம் மட்டும் விண்வெளியில் 1179 அடையாளம் தெரியாத பொருட்கள் பறந்து உள்ளன. முந்தைய வருடம் இதே மாதத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருட்களை விட 600 பொருடகள் இது அதிகமாகும்.   

உலக அரசாங்கங்கள்  பல சதாப்தங்களாக மறைத்து வைத்துள்ள   மர்மங்களை வெளிப்படுத்தும் விளிம்பில் உள்ளன.  இது மிகவும் சுவாரஸ்மயான விஷயமாகும்  அது குறித்து நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறி உள்ளது.