பிரிட்டனில் குடிகாரர்கள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு!
பிரிட்டனில் மதுஅருந்தியவர்கள் செய்யும் அட்டகாசமானது உச்சம் அடைந்து உள்ளது. பிரிட்டனில் குடித்துவிட்டு செய்பவர்கள் ரகளையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குடிபோதையில் இருப்பவர்களால், பொதுமக்களுக்கு பாலியல் தொந்தரவு, அவமானத்தை ஏற்படுத்துகின்றன. அதிகமான பிரிட்டன் மக்கள், குடித்துவிட்டு செல்பவர்களின் நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடமேற்கு பிரிட்டனில் சுமார் 78 சதவிதம் பொதுமக்கள் குடித்துவிட்டு செய்யும் ரகளையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். குடிபோதையில் இருப்பவர்களால், பொதுமக்கள் பல்வேறு விதமான சங்கடங்களுக்கு உள்ளாகி உள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற சம்பவங்களால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிகாரர்களால் பாலியல் தொந்தரவு, பயம், பொது இடத்தில் அவமானப்படுத்துதல், வாந்தி எடுப்பதால் பாதிக்கப்படுதல், சிறுநீர் கழித்தல் மற்றும் இரவில் கண் விழித்தல் என பலதரப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிதவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். குடியால் சாலை விபத்து ஏற்படுகிறது. பெற்றோர்கள் குடிபோதையில் இருப்பதால் சிறுவர்கள் பள்ளி செல்ல முடிவது இல்லை. குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகமான பணத்தை குடிப்பதற்கு செலவுசெய்வதால் பெரும் பணப்பிரச்சனையை சந்திக்கின்றனர். குடித்துவிட்டு குடிகாரர்கள் செய்யும் ரகளையும், அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக ஷெபீல்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இத்தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுபானங்களை குடித்துவிட்டு செய்பவர்கள் செய்யும் ரகளையால் ஏற்படும் பிரச்சனையில் ஆகும் செலவானது மிகவும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் மட்டும் இதுபோன்ற சம்பவங்களில் ஏற்பட்ட பலதரப்பட்ட செலவிமானது 15.4 பில்லியன் பவுண்ட் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஸ்காட்லாந்தில் குடிப்பவர்களில் இருபதில் ஒருவர், குடும்பம் அல்லது திருமண பிரச்சனையால் குடிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் பெண்கள் குடித்துவிட்டு ஆண்களைவிட தேவையற்ற பாலியல் கவனத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்கள் தங்களது ஆண் நண்பர்கள் நிராகரித்த காணத்தினாலோ, உறவினர்கள் நிராகரித்த காரணத்தினாலோ இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மதுபானம் அனைவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்றும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போதுமான புகார்கள் அரசுக்கு அனுப்பட்டு உள்ளது என்றும் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்புவதாக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



