Breaking News

இனப் பிரச்சினைக்கு தீர்வு வேடுமையின் தமிழ் தேரிய கூட்டமைப்பை...

தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு குடையின் பெறவேண்டுமாயின்    ஐந்து வருட காலத்தினுள் எட்டக்கூடியளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றம் கொண்டுசெல்ல வேண்டுமென்று கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தமிழ் மக்களின் உரிமைக்காக வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர,  நாங்களும் போராடுகின்றோம்' என்றார். 'மேலும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில்  நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும். கடந்த ஜனாதிபதியின்; ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுப்பதற்கு முன்னரே,  மக்கள் முடிவு எடுத்து வாக்களித்தனர். அந்த நிலைமை இந்தத் தேர்தலிலும் இருக்கவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.