ஹிஸ்புல்லாஹ்வை மீண்டுமொருமுறை பிரதிநிதியாக்க ஒன்றுபடுவோம் - யுனைடெட் விளையாட்டு கழகம் வேண்டுகோள்.
ஹிஸ்புல்லாஹ்வை மீண்டுமொருமுறை பிரதிநிதியாக்க ஒன்றுபடுவோம் - யுனைடெட் விளையாட்டு கழகம் வேண்டுகோள்.
ஹிஸ்புல்லாஹ்வை மீண்டுமொருமுறை பிரதிநிதியாக்க ஒன்றுபடுவோம் என காத்தான்குடி யுனைடெட் விளையாட்டு கழகம் துண்டுப் பிரசுரம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஊருக்கு எம்.பி.வேண்டும் உதாசீனம் செய்யாதீர்கள் என்ற தலைப்பில் 12.07.2015 திகதியிட்டு நேற்று (20) குட்வின் சந்தியில் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ மீண்டுமொரு பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கண்ணியமும் புண்ணியமும் பூத்துக்குலுங்கும் காத்தான்குடி மண்ணையும் அதனைச் சூழவுள்ள நமது பிரதேசங்களையும் பாதுகாக்கும் நமது பிரநிதித்துவத்தை எவ்வாறு உறுதிப்படுத்தலாம் என்ற சிந்தனையை முன் வைப்பதே இந்தப் பிரசுரத்தின் நோக்கமாகும்.
அது மிகவும் இக்கட்டான காலகட்டம். முஸ்லிம் சமூகம் இந்த மண்ணில் வாழ்வதா சாவதா என்ற வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் புலிப் பயங்கரவாதம் தாண்டவமாடிய காலம். அக்காலப்பகுதியில் தனது பெறுமதியான உயிரை துச்சமென மதித்து நமகக்காக அரசியல் தலைமைத்துவத்தை விதைத்தவர்தான் நமது பிரதிநிதியான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள்.
1988ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் விடுதலைப் புலிகளின் மரண தண்டனை கடிதத்தையும் வைத்துக் கொண்டு உங்களுக்காக பணி செய்யத் தொடங்கிய அவர் இன்று வரை கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக மகத்தான மக்கள் பணி செய்து வருகிறார்.
நமது மண்ணுக்கு எதுவுமே தேவையில்லை என்கின்ற அளவிற்கு பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திகளை அவர் செய்தாலும் இன்னும் இடைநடுவில் நிற்கும் நிiவேற்றப்பட வேண்டிய பல பணிகள் உள்ளன. உலமாக்களுக்கான பல்கலைக்கழக அபிவிருத்தி வேலைகள், ஊர் வீதி அபிவிருத்தி, வெல்கம் போர்ட் நவீனமயம், சர்வதேச மைதானத்திற்கான ஆற்றை நிரப்பும் வேலைத்திட்டம்இ அல்-அக்ஸா பள்ளிவாயல், கடற்கரை அபிவிருத்தி இப்படி பல பிரதான அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் உள்ளன. இவைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டுமானால் மீண்டும் எமது பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.
இன்று எமது பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்து நமது மக்களை அரசியல் அனாதைகளாக்க பல்வேறு சக்திகள் சதித்திட்டங்களை தீட்டி செயற்படுகின்றன. கட்டுக்கட்டாக பணத்தைப் பெற்றுக்கொண்டு அன்னிய மதத்தினருக்கும் வேறு பிரதேசங்களுக்கும் நமது பிரதிநிதித்துவத்தை தாரைவார்க்க இவ்வாறான சக்திகள் கங்கணம் கட்டி செயற்படுகின்றன.
இலங்கை முஸ்லிம்களின் தாயகமான எமது காத்த நகர் மண்ணின் தலைமைத்துவத்தை அழித்து எமது தளபதியின் பிரதிநிதித்துவத்தை பறித்து எமது மண்ணை விதவையாக்கி எமது மக்களை அரசியல் அநாதைகளாக்கி மற்றோரிடம் கைகட்டி நிற்பதற்கு நாம் இடமளிக்க முடியுமா?
காலங்கடந்த ஞானமும் சிந்தனையும் எதற்குமே உதவாது என்பார்கள்.
அதேபோல் தூரத்து தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்பார்கள். அதற்கமைய நமது காலடியிலிருந்து நமக்காகப் பணிசெய்யும் நமது மகன் ஹிஸ்புல்லாஹ்வை மீண்டுமொரு முறை நமது பிரதிநிதியாக்க அனைவரும் ஒன்றுபடுவோம். அவரது வெற்றிக்காக இந்த புனித நாட்களில் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம் எனவும் அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நிருபர்



