Breaking News

ரஜினிமுருகன் வெளிவருமா இல்லையா..? சிக்கலில் தவிக்கும் லிங்குசாமி.!!

சொன்னதை சொன்னபடி செய்வோம்’ என்று வேட்டியை மடிக்காத குறையாத செய்துவந்தனர் ‘ரஜினிமுருகன்’ படக்குழுவினர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் – ஏப்ரல் 25 வெளியீடு, மே 29ஆம் தேதி – சிங்கப்பூரில் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு மற்றும் ஜுன் 7ஆம் தேதி – இசை வெளியீடு என்று ஒவ்வொன்றையும் அறிவித்துவிட்டு அத்தனையும் செய்து காட்டியிருந்தனர். இதற்கிடையில் ‘ரஜினிமுருகன்’ படத்தின் வெளியீட்டை யாராலும் தடுக்க முடியாது என்று முருகன் மேல் ஆணையாக கூறியிருந்தார் லிங்குசாமி. ஜுலை 17ஆம் தேதி ‘ரஜினிமுருகன்’ படம் வெளிவரும் என அறிவித்துவிட்டு தற்போது அதற்கான வேலைகளில் ஈடுபடாமல் உள்ளனர். காரணம் லிங்குசாமிக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பே காரணம் என்று கூறப்படுகிறது. ‘உத்தமவில்லன்’ படத்தின் போது எழுந்த அதே பணநெருக்கடி பிரச்சினை தற்போதும் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உருவெடுத்தவர் சிவகார்த்திகேயன். அவருக்கு ‘என்னம்மா இப்படி பண்ணிட்டாரே’ லிங்குசாமி என ‘சம்பந்த’படாதவர்கள் இவர்களின் படப்பாடலை பாடி வருகின்றனர். ‘ரஜினிமுருகன்’ படம் மற்றொரு எம்ஜிஆர் (மக கஜ ராஜா) என்று வருண்மணியன் ஒருமுறை லிங்குசாமிக்கு எதிராக ட்வீட் செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.