Breaking News

வெற்றிலையைவிட்டு யானையில் ஏறிய உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீரிகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இவர்கள் கட்சி மாறியுள்ளனர். அஜித் திலகரத்ன, எம்.பீ.திசாநாயக்க, சனத் ரணசிங்க, மற்றும் திலக் அஷோக்க உள்ளிட்ட உறுப்பினர்களே இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். மீரிகம கண்டலம பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அதன் தொகுதி அமைப்பாளர் உதேன விஜேரத்னவிடம் தெரிவித்துள்ளனர்.