Breaking News

இளைஞன், வயோதிகன், பெண் - மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் சிவ கார்த்திகேயன்

சிவ கார்த்திகேயனின் புதிய படம் குறித்த செய்திகள், அவர் பரிசோதனை முயற்சிக்கு தயாராகிவிட்டார் என்பதை காட்டுகின்றன. ஆர்.டிராஜா தயாரிப்பில் பாக்யராஜ் பாரதி இயக்கும் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் பலரின் புருவங்களை உயர்த்தியது. ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், ஒப்பனைக்கு வீட்டா கலைஞர்கள், சண்டைப் பயிற்சிக்கு வெளிநாட்டு கலைஞர்கள், ஒலி அமைப்புக்கு ரசூல் பூக்குட்டி என அனைவரும் முதல்வரிசை தொழில்நுட்பக் கலைஞர்கள். கூடுதல் தகவல், இந்தப் படத்தில் சிவ கார்த்திகேயன் மூன்று  கெட்டப்புகளில் தோன்றுகிறார். ஒன்று அவரது உண்மையான தோற்றம், இளைஞன். இன்னொன்று வயோதிக கிழவர். மூன்றாவது பெண் வேடம். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்குகிறது. நண்பரின் பேனரில் சிவ கார்த்திகேயனே படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.