சவுதி அரேபியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி
சவுதி அரேபியாவில், ஆசிர் மாகாணத்தில் அபா என்ற நகருக்கு அருகே தீவிரவாத தடுப்பு போலீஸ் முகாம் உள்ளது. அந்த வளாகத்தில் ஒரு மசூதியும் உண்டு. அந்த மசூதிக்குள் இன்று மதியம் ஒருவர் உடல் முழுக்க வெடிகுண்டுகளை கட்டி வந்து வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார். இதன் காரணமாக அந்த மசூதியே குலுங்கியது. இந்த தாக்குதலில் 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் சிறப்பு நெருக்கடி கால படையினர் என்றும், மற்றவர்கள் பணியாளர்கள் எனவும் சவுதி டெலிவிஷன் கூறியது. இதில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை



