கிழக்கில் விசேட பாதுகாப்புக்கு ஏற்பாடு !
கிழக்கு மாகாணத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் குழப்பம் விளைவித்த சம்பவமும் இவ்வாறு பணிப்புரை விடுக்க ஏதுவாகியது என தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பில் பாரதூரமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.



