Breaking News

அவுஸ்திரேலியாவில் கொக்கெய்ன் இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் 91 வயதான நபர் கைது

சவற்காரப் பெட்டிகளுக்குள் மறைத்து இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கொக்கெய்ன் போதைப் பொருளைக் கடத்திய அவுஸ்திரேலியாவில்; 91 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குற்றம் நிரூபிக்கப்படுமானால் உலகில் மிகவும் வயதான கடத்தல்காரர் என்ற பெயரைப் பெறுவார். சிட்னியைச் சேர்ந்த விக்டர் ட்வார்ட்ஸ் என்பவர் மீது கடந்த ஜூலை 8ஆந் திகதி புதுடெல்லியிலிருந்து வந்த விமானத்தில் 4.5 கிலேகிராம் கொக்iகெய்னை 27 சவற்காரப் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்தியதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயணப் பொதிகளை ஆயத்தம் செய்யும் போது பயணிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர்களை அறியாமலேயே அவர்கள் இவற்றை கொண்டுவர வாய்ப்புள்ளதாக பொலீஸார் எச்சரித்தனர். யாராவதது ஒரு பொருளை வைத்திருக்குமாறு தந்தால் அதனுள் என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனையோர் உங்களது பயணப் பைகளை பொதி செய்வதற்கோ அல்லது சுமந்து வருவதற்கோ அனுமதிக்க வேண்டாம். இதற்கு முன்னதாக 2010ஆம் ஆண்டு உலகின் மிக வயதான கடத்தல் காரராக கண்டறியப்பட்டவர் ஒலா மயா ஏஜீ என்பராவார். 87 வயதான இவர் புளோரிடாவில் வைத்து கைது செய்யப்பட்டார் 2012ஆம் ஆண்டு பிரித்தானியாவில் 83 வயதான பிரான்ஸிஸ் குக் சுமார் 200 கஞ்சா செடிகனை வளர்த்தமைக்காக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிட்னியைச் சேர்ந்த நபருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
எம்.ஐ.அப்துல் நஸார்