செத்துப் போவதற்குப் பேசாமல் செவ்வாய்க்குப் போய் விடலாம்.. அதிரடி அமெரிக்கர்
செவ்வாயில் சென்று குடியேறப் போகும் நூறு பேரில் ஒருவர் தான் அமெரிக்காவைச் சேர்ந்த சோனியா வேன் மீட்டர். இன்னும் சில வருடங்களில் இவருக்கு பிரியாவிடைக் கொடுக்க அவரது குடும்பம் தயாராகி வருகிறது. அமெரிக்காவின் விர்ஜூனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் சோனியா வேன் மீட்டர் (36). இவரது கணவர் பெயர் ஜேசன் ஸ்டான்போர்ட். சோனியா செவ்வாயில் நிரந்தரமாகக் குடியேறப் போகும்100 பேரில் ஒருவராக தேர்வாகியுள்ளார். இது ஒரு வழிப்பயணம் ஆகும்.



