விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சிய சிறுமி
மென்சர் என்ற அமைப்பு சமீபத்தில் அறிவுத்திறன் சோதனை நடத்தியது. பொது அறிவு, நினைவுத்திறன், கணித திறன், சிக்கலுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அறிவுத் திறன் சோதிக்கப்பட்டது.அதில் இங்கிலாந்தை சேர்ந்த நிகோல்பார் என்ற 12 வயது சிறுமி 162 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்தாள். விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின் அறிவுத்திறன் குறியீட்டை 160 புள்ளிகள் என மென்சா நிர்ணயித்துள்ளது. ஆனால் சிறுமி நிகோல்பார் 162 புள்ளிகள் பெற்று இருக் கிறார். இவள் இங்கிலாந்தில் ஹார்லோ என்ற இடத்தை சேர்ந்தவள். அவள் அங்கு 7-வது வகுப்பு படித்து வருகிறாள். இவளது தந்தை ஜேம்ஸ் துப்புரவு தொழிலாளி, இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்கிறார். எனவே சிறுமி நிகோலஸ் பார் தனது தாயாருடன் தனியாக வசிக்கிறாள்.தற்போது தனது மகள் குறித்து வெளிவரும் பாராட்டு செய்தி குறித்து பெருமைப்படுவதாக ஜேம்ஸ் பெருமைப்படுகிறார்.



