Breaking News

தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ள இலங்கை தம்பதிகளின் தற்கொலை செய்ய முன்னர் எழுதிய கடிதம்!

தமிழ்நாடு திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு தமிழக அரசு தடையாக இருந்துள்ளமை பெரும் வருத்தத்தை ஏற்படுத்திய சம்பவமாக மாறியுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியர்  மகேஸ்வரன் (35)  அவரது மனைவி பிரசாந்தி (30) மகேஸ்வரன் போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்,

இவர்கள் பலதடவை ஒன்று சேர்வதற்கு தமிழக அரசிடம் வேண்டியும் வேண்டுகோள் நிரகரிக்கபட்டமையால் , இருவரும் ஒன்றாக தூக்க மாத்திரை அருந்தி தற்கொலைக்கு செய்துள்ளமை அனைவரயும் சோகத்தில் அழ்தியுள்ளதுடன்தமிழக தமிழ்நாடு அரசை தலைகுனிய வைத்துள்ளது.