Breaking News

காத்தான்குடியில் சட்டவரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கை – பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அதிருப்தி

தேர்தல் காலத்தில் காத்தான்குடியில் சட்டவிரோதமான, தேர்தல் விதிகளை மீறுகின்ற தேர்தல் நடவடிக்கைள் நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இன்று (04) காத்தான்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேர்தல் காலத்தில் காத்தான்குடியில் சட்டவிரோதமான, தேர்தல் விதிகளை மீறுகின்ற தேர்தல் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் இது சம்பந்தமாக எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் முறைப்பாடுகளைச் செய்தபோதிலும் அதற்கான பெறுபேறுகள் எமக்குக் கிடைக்கவில்லை. அதனால் அதிருப்தியுற்ற நிலையில் இருக்கின்றோம். 

ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறும்போது இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறக் கூடாது. 

கடந்த ஓரிரு தினங்களாக காத்தான்குடியில் ஹஸ்புல்லாஹ் கலாச்சார மண்டத்திலும் அதேபோன்று காங்கேயனோடை, பாலமுனை போன்ற பிரதேசங்களிலும் தேர்தல் பிரச்சாரம் என்ற விடயத்தை மறைத்து மார்க்கச் சொற்பொழிவு மற்றும் பெண்களுக்கான மாநாடு என்ற போர்வையில் மக்களை பஸ்களில் அழைத்து வந்து இங்கு அவர்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள், இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளர் ஒருவர் தனது கட்சியின் சின்னத்தையும் தனது விருப்பு இலக்கத்தினையும் பொறித்து வழங்குவது தொடர்பில் உரியவர்களிடம் முறையிட்டபோதும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை 

தான் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மக்களுடைய வரிப்பணத்தை வீணாக்குவதாகவே நாம் அதனைப் பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். 
எம்.ஐ.அப்துல் நஸார்